பிரபல நடிகை அஞ்சலி தான் அந்தரத்தில் யோகா செய்து அசத்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான ‘கற்றது தமிழ்’ எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன்பிறகு அவர் நடித்த ‘அங்காடித்தெரு’ திரைப்படம் அவருக்கு திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. இதையடுத்து அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. நடிகை அஞ்சலி தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் நவரசா எனும் ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதை தவிர தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்து அசத்தும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CRwBcF4JUNh/?utm_medium=copy_link