”காத்துவாக்குல ரெண்டு காதல்’ பட ட்ரைலர் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”காத்துவாக்குல ரெண்டு காதல்”. இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, பிரபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
மேலும், வருகிற ஏப்ரல் 28ம் தேதி இந்த திரைப்படம் தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் சூப்பரான ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது யூடியூபில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்து வருகிறது. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.