Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா….. ‘இதை மறந்துவிட்டேனே’…. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ட்விட்டர் பதிவு…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இதனயடுத்து இவர் இயக்கி  நடித்து இரண்டாவது திரைப்படமாக சமீபத்தில் வெளியான திரைப்படம் ”லவ் டுடே”.

பிரதீப் ரங்கநாதன்

இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், ராதிகா, இவானா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் 1997 ஆம் ஆண்டு இயக்குனர் பாலசேகரன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படத்தின் டைட்டில் ஆகும்.

இதனையடுத்து இயக்குனர் பாலசேகரனுக்கு நான் நன்றி தெரிவிக்க மறந்து விட்டேன் என ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இயக்குனர் பிரதீப் பகிர்ந்துள்ளார். இந்த பதிவில், ”லவ் டுடே தலைப்பை உருவாக்கியவருக்கு முதலில் நன்றி சொல்ல மறந்து விட்டேன். காலத்தால் அழியாத தலைப்பை உருவாக்கியதற்கு நன்றி சார்” என பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |