Categories
சினிமா தமிழ் சினிமா

‘அயலான்’ அப்டேட்… சிவகார்த்திகேயன் பிறந்தநாளில்… ரசிகர்களுக்கு செம ட்ரீட்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ‘அயலான்’ படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘அயலான்’ . இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார் . இந்த படத்தில் கதாநாயகியாக  ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் .

அயலான்

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்திருந்தது . இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளான பிப்ரவரி 17ஆம் தேதி ‘அயலான்’ படத்தின் முதல் பாடலை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் . மேலும் இந்த ஆண்டின் இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது .

Categories

Tech |