Categories
தேசிய செய்திகள்

அயோத்தி விவகாரம் …. மத்தியஸ்தர் குழு அறிக்கை தாக்கல் …..!!

அயோத்தி சர்சைக்குரிய நிலம் தொடர்பாக தொடர்பாக மத்தியஸ்த்தர் குழு தனது இடைக்கால அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்  குழுவை அமைத்தது.

Seithi Solai

மேலும் இந்த குழு தனது அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் அயோத்தி விவகாரம் தொடர்பாக மனுவை தொடுத்தவரின் சட்டவாரிசான கோபால் சிங் விசாரத் , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த புதிய மனுவில், அயோத்தி விவகாரத்தில் நீதித்துறை தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும், மத்தியஸ்த குழுவின் நடவடிக்கையால் எந்த பயனுமில்லை என்று கூறி இருந்தார்.

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்த குழுவின் இடைக்கால அறிக்கை தாக்கல்

இந்த மனு மீதான விசாரணை கடந்த 11_ஆம் தேதி  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது விசாரித்த நீதிபதி கலிபுல்லா தலைமையிலான குழு மத்தியஸ்தம் தொடர்பான தற்போதைய நிலவரத்தை அறிக்கையாக வருகின்ற ஜூலை 18-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.மேலும் உச்சநீதிமன்றத்தில் தனது மத்தியஸ்தகுழு தனது  இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ததையடுத்து ஜுலை 31 ஆம் தேதி வரை சமரச பேச்சுவார்த்தையை தொடரலாம் என்று கூறி வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Categories

Tech |