ராமர் கோவிலில் பூமி பூஜை நடந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அயோத்தி ராமர் கோவிலில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் 175 பேர் கலந்து கொண்டனர். கொரோனா பாதிப்பு காரணமாக இவ்விழாவில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அழைக்கப்பட்டன. பூமி பூஜையின் போது, துறவிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமர்ந்து இருந்தவாறு உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படமானது கொரோனா ஊரடங்கு விதிகளை மீறும் வகையில் பல துறவிகள் பூமி பூஜையில் கலந்து கொண்டனர் எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.
வைரலாக பரவி வந்த இந்த பதிவுகளை ஆய்வு செய்து பார்த்த போது அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் போது எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. உண்மையில் வைரலாகி வந்த புகைப்படம் 2013 கும்ப மேளா நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படத்தை ஜெர்மனியை சேர்ந்த தோர்ஜ் பெர்ஜர் எனும் புகைப்பட கலைஞர் படம்பிடித்துள்ளார். இதனால் வைரலாகும் புகைப்படம் அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையின் போது எடுக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. அதனால் போலி செய்திகளை பரப்பாதீர்கள்.