Categories
தேசிய செய்திகள்

மொத்தம் 101 கோடி ரூபாய் ஒதுக்கீடு… தரம் உயர்த்த திட்டம்… விமான நிலைய பெயர் அறிவிப்பு…!!

அயோத்தியில் கட்டப் படும் விமான நிலையத்திற்கு 101 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி சுரேஷ் கண்ணா அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் மசூதி, ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பக்தர்கள் வருகையானது அதிகமாக காணப்படும் என்பதை கருத்தில் கொண்டு அங்கு கட்டப்படும் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் மந்திரி சுரேஷ் கண்ணா உத்தரபிரதேச சட்டசபை யில் 2021-22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அந்த நிதி அறிக்கையில் 101 கோடி ரூபாய் அயோத்தியில் கட்டப்படும் விமான நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் அந்த விமான நிலையம் “மரியாதா புருஷோத்தம் ஸ்ரீராம் விமான நிலையம்” என அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |