அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சிலர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக பாளையங்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோட்டூர் பகுதியில் 4 பேர் அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து நடத்திய விசாரணையில் கோட்டூர் பகுதியில் வசிக்கும் செல்வநாயகம், கொம்பையா, இசக்கி மற்றும் தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் மாரிச்செல்வம் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த அரிவாள், கம்பு போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.