Categories
மாநில செய்திகள்

ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா அறிகுறி …..!!

மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு. ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அனைத்து தரப்பு மக்களும் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். மக்கள் நலப் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஆட்சியர்கள் எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள் அமைச்சர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

இந்நிலையில் மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக்கிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளவர் நேற்று நடைபெற்ற பரிசோதனையில் தனக்குப் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |