Categories
தேசிய செய்திகள்

ஆயுஷ் கொரோனா ஆலோசனை பெற ஹெல்ப்லைன் நம்பர்… நாடு தழுவிய அளவில் துவக்கம்…!!!

நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்று தொடர்பான எந்த பிரச்சனைகளுக்கும் 14443 ஹெல்ப் லைன் நம்பரை தொடர்பு கொள்ளலாம் என்று ஆயுஸ் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில்  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் மக்கள் பலர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வைப்பதற்கு கட்டணமில்லா உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 14443 என்ற கட்டணமில்லா எண்ணில் காலை 6 மணிமுதல் இரவு 12 மணிவரை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுனர்கள் பொதுமக்களின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் தீர்வு சொல்லுவார்கள் என்று ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது இந்தியிலும், ஆங்கிலத்திலும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகின்றது விரைவில் பிற மொழிகளிலும் ஆலோசனை கிடைக்கும் என தெரிவித்துள்ளது. ஸ்டெப்ஒன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், ஆயுஷ் அமைச்சகம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |