Categories
தேசிய செய்திகள்

“ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை”….. இனி எல்லாமே ஈஸி தான்…. எய்ம்ஸ் மருத்துவமனையின் அதிரடி முடிவு….!!!!!

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் எம். ஸ்ரீனிவாஸ் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எய்ம்ஸ் மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்கான பதிவுக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அட்டை பயன்படுத்தப்படுகிறது. இந்த அட்டையை தற்போது வெளி நோயாளிகளும் பயன்படுத்தும் வகையில், தொடர் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட இருக்கிறது.

இதை எய்ம்ஸ் மருத்துவமனைகளில் கியூ ஆர் கோடு மற்றும் ஸ்கேன் மூலம் விரைவில் பதிவு செய்யப்படும் வசதி அறிமுகப்படுத்தப்படும். இதனால்நோயாளிகள்  நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் எய்ம்சில் உள்ள ராஜ்குமாரி அம்ரித் கௌர் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் நவம்பர் 21 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அறிமுகப்படுத்தப்படும். மேலும் மருத்துவமனைக்கு நோயாளிகள் சிகிச்சைக்கு வந்த பிறகு அவர்கள் சிகிச்சை பெறுவதற்கான நேரத்தை இது விரைவுப்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |