பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 4 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள் மற்றும் வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது சங்கரலிங்கபுரம் பகுதியில் வசிக்கும் மந்திரமூர்த்தி, மதன்குமார், கருப்பசாமி மற்றும் பரமசிவன் ஆகிய 4 பேர் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் வகையிலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் அரிவாள் மற்றும் வாள் போன்ற பயங்கரமான ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.