Categories
தேசிய செய்திகள்

அய்யயோ!… “என் மனைவிடம் இருந்து காப்பாற்றுங்கள்”‌… அலறும் அப்பாவி கணவன்… பிரதமர் அலுவலகத்திற்கு பரபரப்பு புகார்….!!!

பெங்களூருவில் யதுநந்தன் ஆச்சார்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமூக ஊடகங்கள் மூலம் தனது குறைகளை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளார். அவர் தனது டுவீட்டை பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி மற்றும் மத்திய சட்டம் மற்றும் நிதித்துறை மந்திரி கிரண் ரிஜ்ஜூ ஆகியோருக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து யதுநந்தன் டுவிட்டர் பதிவில், “யாராவது எனக்கு உதவுவார்களா அல்லது இது நடந்த போது யாராவது எனக்கு உதவி செய்தார்களா? இல்லை.

ஏனென்றால் நான் ஒரு மனிதன். என் மனைவி என்னை கத்தியால் தாக்கினார். இது தான் நரி சக்தியா?. இதற்காக அவள் மீது குடும்ப வன்முறை வழக்கு போடலாமா மனைவியால் கத்தியால் குத்தப்பட்டதில் தன் கையில் இருந்து ரத்தம் கொட்டியதாக என்று அவர் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவரது டுவிட்டருக்கு பதில் அளித்த பெங்களூர் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, காவல் நிலையத்துக்கு சென்று சட்டபூர்வமாக புகார் கொடுக்குமாறு, அவரது குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் யதுநந்தன் ஆச்சாரியா பல்வேறு பிரிவுகளின் ஆதரவை பெற்றுள்ளார்.

https://twitter.com/yaadac/status/1586333846244507648

Categories

Tech |