பிகில் பட கொண்டாட்டத்தை ரசிகர்கள் உற்சாகமாகவும் , பல வகைகளிலும் கொண்டாடி வருகின்றனர்.
பல்வேறு தடைகளை கடந்து நடிகர் விஜயின் பிகில் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகர் விஜய் ராயப்பன் , மைக்கில் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று திரையிடப்பட்ட பிகில் படத்திற்கு ரசிகர்கள் ஆரவாரம் மிகவும் உற்சாகமாகவே உள்ளது. ஏற்கனவே பிகில் படம் வெற்றியடைய வேண்டுமென்று தமிழக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டு கொண்டாடினர். இன்று அதிகாலை முதல் பிகில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றது.
பிகில் படத்தை கொண்டாடும் வகையில் அந்தந்த பகுதி திரையரங்கில் ரசிகர்கள் உற்சாகமாக பிகில் படத்தை கொண்டாடி வருகின்றனர். கேரள விஜய் ரசிகர்கள் பிகில் ராயப்பன் விஜய்க்கு சிலை வைத்து கொண்டாடினர். அனைத்து திரையரங்கும் கோலாகலம் பெற்றுள்ள நிலையில் சமூக வலைத்தளமான ட்வீட்_டரிலும் விஜய் ரசிகர்கள் வெறித்தனமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.விஜயின் பிகில் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், #BigilFDFS #BigilReview #Rayappan #BigilFromToday #BigilDiwali போன்ற ஹேஷ்டேகுகள் சென்னை மற்றும் இந்திய அளவில் டிரெண்டாகி, ட்விட்டரை ஆட்கொண்டுள்ளது. விஜய் ரசிகர்கள் என்ன ஹேஷ்டேக் பயன்படுத்தினாலும் அது இந்தியளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.