தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடிஅறிவித்துள்ளார். இந்த கலந்தாய்வில் 7. 5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வாகும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சேர்க்கை ஆணைகளை வழங்க உள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக, மொத்தம் 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றன. இதனால், 1,51,870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு கிடைத்துள்ளன. 5 கட்டங்களாக கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் தொடங்க உள்ளது.