பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப்படிப்புக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கீழ்காணும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 2021, 22 ஆம் ஆண்டிற்கான தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்து பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதிநேர பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அந்த வகையில்பி.இ, பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கல்வித்தகுதிகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. இதன்படி “பி.எஸ்சி டிப்ளமோ பொறியியல் பட்டய படிப்புகளில் 45 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கை வழங்கலாம். எஸ்சி, எஸ்டி மாணவர்கள் 40 சதவிகித மதிப்பெண் பெற்றால் போதுமானது” என கூறியுள்ளது.