Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க. அல்லாத 11 மாநில முதல்வர்களுக்கு… கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்…!!!

மத்திய அரசு தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என பினராய் விஜயன் 11 மாநில முதல்வருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் பாஜக அல்லாத 11 மாநில முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தடுப்பூசி பிரச்சினையை தீர்ப்பதற்காக மாநிலங்கள் ஒன்றாக சேர்ந்து மத்திய அரசிடம் இலவசமாக தடுப்பூசியை வினியோகிக்க கோரிக்கை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான சுமையை மாநிலங்களின் மீது வைத்தால் அது நிதி நிலைமையை கடுமையாக பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.

மாநிலங்களின் நிதி வலிமை என்பது ஆரோக்கியமான கூட்டாட்சி அமைப்புக்கு இன்றியமையாத அம்சமாகும். மாநிலங்களில் நிதி சிக்கல் ஏற்பட்டால் அது கூட்டாட்சி பலவீனப்படுத்தும். எனவே ஜனநாயக அரசியலுக்கு இது உகந்தது கிடையாது. இதனால் மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்வைக்க வேண்டும் என அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |