பதஞ்சலி யோகா சமிதி சார்பில் 3 நாட்கள் நடைபெறும் யோகா பயிற்சி முகாம் புதுச்சேரி கடலூர் செல்லும் சாலையில் உள்ள ஏஎப்டி மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்து யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர். யோகா குரு பாபா ராம்தேவ் புதுச்சேரி வருகையையொட்டி ஏஎப்டி திடலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.