Categories
தேசிய செய்திகள்

பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக வழக்குப் பதிய வேண்டும்… பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் கடிதம்…!!

யோகா குரு பாபா ராம்தேவ் மீது தேசத்துரோக குற்றம் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ் ஆங்கில மருத்துவம் குறித்து கடுமையான விமர்சனங்களை செய்திருந்தார். அவர் ஆங்கில மருத்துவத்தை ” முட்டாள் மருத்துவம்” என்று கூறியது பெரும் சர்ச்சையானது. அதுமட்டுமில்லாமல் ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு தான் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ராம்தேவ் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதை அடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ராம்தேவ் தனது கருத்துக்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். பின்னர்  ராம்தேவ்வும் கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல்  தனது கருத்து யாரையாவது காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். இதைதொடர்ந்து இந்திய மருத்துவ சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் “கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பத்தாயிரம் மருத்துவர் தங்கள் நலனை கருதாமல் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த சேவையையும், மருத்துவத்தையும் முட்டாள்தனமானது என்று விமர்சிப்பது மிகுந்த வேதனையை அளிக்கின்றது என்று கூறியிருந்தனர். இதையடுத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக இந்திய அரசின் சிகிச்சை முறையை தவறானது என்று கூறுவது தேசத்துரோக குற்றம் என்பது எங்களுடைய கருத்து. இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தேசத்துரோக குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |