Categories
தேசிய செய்திகள்

யானை மீது யோகா செய்த பாபாராம்தேவ்…. பொத்தென்று கீழே விழுந்த சோகம் …!!

யானையின் மீது அமர்ந்து யோகா பயிற்சி செய்த போது தவறி விழுந்த பாபா ராம்தேவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கூர்கானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அங்கு நின்றிருந்த யானை மீது ஏறி அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார். அப்போது திடீரென அந்த யானையை அசைந்ததால் நிலை தடுமாறிய அவர்,  யானை மேல் இருந்து தவறி கீழே விழுந்தார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது தெரிய வந்திருக்கும் நிலையில், அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |