Categories
மாநில செய்திகள்

“பப்ஜி தடை”… டாக்டர் ராமதாஸ் வரவேற்பு…!!

118 செயலிகளை மத்திய அரசு தடை செய்ததற்காக டாக்டர் ராமதாஸ் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் நலன் கருதி மத்திய அரசு 118 செயலிகளை தடை விதித்துள்ளது. முக்கியமாக இந்த பப்ஜி என்ற கேம் செயலி மூலம் மாணவர்கள் சமூக சீர்கேட்டுக்கு ஆளாகி வருகின்ற காரணத்தால் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்முறையை குறித்து பல்வேறு தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவில் ‘பப்ஜி’ எனப்படும் இணைய விளையாட்டு செயலி போன்ற 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது.

கல்வியை சிதைத்து வன்முறையை வளர்க்கும் இந்த செயலி தடை செய்யப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து மீட்கப்படுவார்கள். ‘பப்ஜி’ இணைய விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 10-ந் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன். பா.ம.க.வின் கோரிக்கை தாமதமாக,  ஏற்கப்பட்டிருந்தாலும், மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. ‘பப்ஜி’ விளையாட்டு தடை செய்யப்பட்டிருந்தாலும் இதற்கு முன்பு அந்த விளையாட்டை விளையாடி,  அதற்கு அடிமையாகிருந்த மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகாமல் தடுக்கப்பட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |