அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் தங்களுக்கு சொந்தமானது என்று டெல்லியை சேர்ந்த ராணி மற்றும் ராணி கபூர் என்ற சகோதரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு பாபர் மசூதி இடிப்பு வழக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. அதற்காக அயோத்தியில் பாபர் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ராமர் கோயில் பணிகளு,ம் மசூதி கட்டும் பணியும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் மசூதிக்கு இடம் தங்கள் தந்தையின் 28 ஏக்கர் நிலத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை பாபர் மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ளதாக இரு சகோதரிகள் அகமதாபாத் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். குடியரசு தினத்தன்று மசூதி கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ என்று பலரும் சந்தேகிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை, பிப்ரவரி 8-ஆம் தேதி விசாரணை நடத்த உள்ளது.