15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்மாக்கியை இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ராயப்பன்பட்டியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 15 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி கர்பமடைந்த நிலையில் பிரசவத்திற்காக தேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறுமிக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதனைதொடர்ந்து சிறுமியின் வயதை உறுதி படுத்திகொண்ட மருத்துவர்கள் உத்தமபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சென்ற உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய ரஞ்சித்தை போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.