பேபி கார்ன் 65
தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் – 8
சாட் மசாலா பவுடர் – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
மாவிற்கு:
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/4 டீஸ்பூன்
தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களுடன் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பேபி கார்ன்னை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து மேலே சாட் மசாலாவைத் தூவினால், பேபி கார்ன் 65 ரெடி!!!