Categories
தேசிய செய்திகள்

மருத்துவர்கள் அலட்சியம்… பறிபோன மகனின் உயிர்… கட்டிப்பிடித்து கதறும் தந்தை… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

மருத்துவர்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உத்தரபிரதேசம் மாநிலம் கனோஜ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரேம்சந்த்-ஆஷாதேவி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஒரு வயதில் மகன் ஒருவன் இருந்துள்ளான். திடீரென இவர்களது மகனுக்கு கடுமையான காய்ச்சலும் கழுத்தில் வீக்கமும் ஏற்பட்டதால் குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கிருக்கும் அரசு மருத்துவமனைக்கு இத்தம்பதியினர் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களும் குழந்தையை தொடக் கூட செய்யாமல் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

அவசர சிகிச்சை தேவைப்படும் குழந்தையை 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கான்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்திய நிலையில் ஏழ்மை வாழ்க்கையை வாழ்ந்து வரும் தந்தை தன் குழந்தையை காப்பாற்ற என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவமனை வாசலிலேயே குழந்தையை கையில் ஏந்தியபடி கதறியுள்ளார். இதனை மருத்துவமனையை சுற்றி இருந்த பலரும் தங்களது அலைபேசியில் படமெடுக்க, சுமார் அரை மணி நேரம் கழித்து மருத்துவமனையில் குழந்தையை ஐசியூவில் அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை  இறந்தது. மருத்துவர்களின் அலட்சியம் தான் குழந்தை உயிரிழந்தது காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மருத்துவமனையின் உயரதிகாரி அதை மறுத்து “அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தோம்  உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் சிகிச்சை அளிப்பதற்கான உயர் அதிகாரியையும் வரவழைத்தோம் ஆனால் எவ்வளவு சிகிச்சை கொடுத்தும் அரை மணி நேரத்தில் குழந்தையின் உயிர் பிரிந்தது. இதில் அலட்சியம் என்பது இல்லை” என தெரிவித்துள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |