தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தை இறந்த சம்பவம் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆரணியில் உள்ள விளை கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி தமிழரசி தாம்பதியினர் இத்தம்பதியினருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு லித்தேஷ் எனும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்றைய முன்தினம் நெசல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றதை தொடர்ந்து தமிழரசி லித்தேஷிர்க்கு தடுப்பூசி போட கொண்டு சென்றுள்ளார்.
அப்பொழுது குழந்தை சளியினால் அவதிப்பட்டது தெரிந்தும் மருத்துவரிடம் பரிசோதிக்காமல் தடுப்பு ஊசி போட்டுள்ளார் செவிலியர். அதன்பிறகு குழந்தை மிகவும் சோர்வாகவே காணப்பட்டுள்ளது. இரவு குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்தனர் பெற்றோர். காலை 3 மணி அளவில் குழந்தை அசைவில்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்ததாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவரிடம் ஆலோசிக்காமல் தடுப்பூசி போட்ட காரணத்தினால்தான் குழந்தை இறந்துவிட்டதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நேற்று நெசல் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து ஆரணி தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என பேசி பொதுமக்களை களைய செய்தனர்
5 மாத குழந்தை தடுப்பூசி போடப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.