Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

1 1/2வயது குழந்தைக்கு…! என்ன தெரியும் ? அலட்சியத்தால் பறி போன உயிர்… திருச்சியில் சோகம் …!!

ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணையை  குடித்த குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி மாவட்டத்தில் உள்ள காமாட்சி பட்டி பகுதியில் சதீஷ்குமார் -சுகன்யா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். சதீஷ்குமார் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஜீவா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளார். இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மண்ணெண்ணையை ஜூஸ் என தவறுதலாக நினைத்து குடித்து விட்டார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அக்குழந்தையை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று அக்குழந்தை பரிதாபமாக இறந்து விட்டது.  இச்சம்பவம் குறித்து முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ் காந்தி வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.

Categories

Tech |