Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ரொம்ப முயற்சி பண்ணுனோம்” குட்டி யானைக்கு நடந்த விபரீதம்…. பலனளிக்காத சிகிச்சை….!!

குட்டி யானை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை மற்றும்  அதனை சுற்றியுள்ள பகுதியில் மான், காட்டெருமை, யானை போன்ற ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் புல்லள்ளி வனப் பகுதியில் சுற்றித்திரிந்த 6 வயது ஆண் குட்டி யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு சாப்பிட முடியாமல் சிரமப்பட்டு உள்ளது. இந்த குட்டி யானை மயங்கிக் கீழே விழுந்ததால் பிற யானைகள் அங்கிருந்து சென்று விட்டன. இதனை அடுத்து குட்டியானை விழுந்து கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் பிரகாஷ் போன்றோர் மயக்கத்தில் இருந்த குட்டி யானைக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் மழை பெய்ததால் தற்காலிக கூடாரம் அமைத்து வனத்துறையினர் அந்த குட்டி யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. அதன் பின் கால்நடை மருத்துவர் குட்டி யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளார். அதன்பிறகு வனத்துறையினர் அங்கேயே குழிதோண்டி குட்டி யானையின் உடலை புதைத்து விட்டனர்.

Categories

Tech |