Categories
சென்னை மாவட்ட செய்திகள்

9 மாத கர்ப்பிணி….. வயிற்றை கிழித்து குழந்தை கொலை…… காதலன் கைது….!!

சென்னை அருகே 9மாத கர்ப்பிணி காதலி வயிற்றை கிழித்த காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை அடுத்த குமாரபாளையத்தில் வசித்து வருபவர் சௌந்தர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான நர்மதா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட அதீத நெருக்கத்தால் கல்லூரி மாணவி கர்ப்பமாகி 9 மாதம் கடந்து விட்டது. இதையடுத்து காதலன் வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகும் என அறிந்து அதனை கலைக்க பல்வேறு முயற்சிகளை ஏற்கனவே மேற்கொண்டார். ஆனால் எதுவும் உபயோகப்படாத நிலையில், 9 மாதம் ஆனதால் வயிற்றை அறுத்து குழந்தையை எடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி வயிற்றை கத்தியால் கிழித்து ஒன்பது மாத குழந்தையை வெளியில் எடுக்க அது இறந்து போனது. 

ஆனால் நர்மதா ரத்த வெள்ளத்தில் துடிக்க அதிர்ந்து போன காதலன் உடனடியாக மருத்துவமனையில் உதவி கேட்டுள்ளார். பின் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் நர்மதாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில்,இப்படி ஒரு கொடூர செயலில் ஈடுபட்ட காதலனை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |