தெருநாய் கடித்தால் மயில் குஞ்சு பரிதாபமாக இறந்து விட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மயில்கள் இருக்கின்றன. இந்நிலையில் அங்குள்ள ஸ்டேட் வங்கி காலனியில் ஒரு மயில் 4 குஞ்சுகளுடன் சுற்றி கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒரு மயில் குஞ்சை கடித்துள்ளது. இதனை பார்த்ததும் தாய் மயில் துரத்தியதால் அந்த குஞ்சை கீழே போட்டுவிட்டு தெரு நாய் ஓடிவிட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் படுகாயமடைந்த மயில் குஞ்சுக்கு சிகிச்சை அளித்தும் அது பரிதாபமாக உயிரிழந்து விட்டது. அதன் பிறகு வனத்துறையினர் இறந்த மயில் குஞ்சின் உடலை எடுத்து சென்று வனப்பகுதியில் புதைத்து விட்டனர்.