Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கிணற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை… அழுகிய நிலையில் மீட்கப்பட்ட கொடூரம்… தென்காசியில் பரபரப்பு…!!

பிறந்து ஒரு வாரமே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் தெற்கு சங்கரன்கோவில் புறநகர் பகுதியில் உள்ள பொட்டல் குளம் அமைந்துள்ளது. அந்த குளத்தின் அருகில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் பாழடைந்த கிணற்றில் ஒரு பச்சிளம் குழந்தை பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக தெற்கு சங்கரன்கோவில் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனிடம் தெரிவித்துள்ளனர். அவர் சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 முதல் 5 நாட்கள் தண்ணீரிலேயே ஊறிப்போய் இருந்த குழந்தையின் உடலை மீட்டனர். ஆனால் அதிக நேரம் தண்ணீரில் கிடந்ததால் குழந்தையின் உடல் முழுவதும் அழுகி துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் அந்த குழந்தை ஆணா பெண்ணா என்பதை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. அதன்பிறகு டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட பரிசோதனையில் அந்த குழந்தை பிறந்து ஒரு வாரம் மட்டுமே ஆனதும், பிறந்த மறுநாளே அந்த குழந்தை கிணற்றில் வீசப்பட்டதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தையின் உடலை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தது யார் என்றும், வளர்க்க வசதி இல்லாமல் யாரேனும் இந்த செயலை செய்தார்களா அல்லது கள்ளத்தொடர்பில் பிறந்ததால் இந்த குழந்தை கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |