Categories
உலக செய்திகள்

காது வலியால் துடித்த குழந்தை…. பரிசோதித்த மருத்துவர்கள்…. காத்திருந்த அதிர்ச்சி…!!

காது வலியால் அவதிப்பட்ட சிறுவனின் காதிற்குள் பல் இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் வசித்து வரும் 3 வயது சிறுவன் ஒருவன் திடீரென காது வலியால் துடித்துள்ளார். இதையடுத்து அவருடைய பெற்றோர்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது அதிக காது வலியுடன் வந்த சிறுவனை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது சிறுவனின் காது துவாரத்தின் வழியே பரிசோதனை செய்தபோது நம்ப முடியாத வகையில் சிறுவனின் காதுக்குள் பல் இருந்துள்ள சம்பவம் மருத்துவர்களை  அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த சம்பவத்தால் அதிர்ந்துபோன மருத்துவர்கள் பின்னர் தீவிர சிகிச்சைக்கு பிறகு சிறுவனின் காதில் இருந்த அந்த பல்லை வெற்றிகரமாக நீக்கியுள்ளனர். ஆனால் எப்படி இப்படி காதுக்குள் பல் வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. மேலும் இது குறித்து மருத்துவர்கள் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். காதுக்குள் பல் இருந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |