Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் பக்கெட்டில் குழந்தை முகம்…. அதிர்ச்சியடைந்த தாய்…. பெரும் சோக சம்பவம்….!!!

மத்திய பிரதேசம் மாநில சேர்ந்த ராகுல் குமார் பைகா என்பவர் தனது குடும்பத்துடன் பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு சந்திரிகா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.ராகுல் குமார் வழக்கம் போல நேற்று காலை மெட்ரோபணி அமைக்கும் இடத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் அவரின் மனைவி மற்றும் குழந்தை மட்டும் இருந்துள்ளனர்.பின்னர் மாலை குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்ற சந்திரிகா மீண்டும் வீட்டிற்குள் வந்து பார்த்தபோது பக்கத்தில் இருந்த தண்ணீரில் குழந்தையின் முகம் மூழ்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை மீட்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |