பிரிட்டனில் ஒரு தம்பதியின் குழந்தை முதன் முதலாக பேசிய வார்த்தை அவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரிட்டனில் இருக்கும் கென்ட் கவுண்டியில் வசிக்கும் Carmen Bish மற்றும் Keiren Parsons என்ற தம்பதிக்கு 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. வழக்கமாக, குழந்தை முதல் முதலில் அம்மா, அப்பா என்று தான் பேசும். அதேபோல, இத்தம்பதியும் தங்கள் குழந்தை எந்த வார்த்தையை பேசும்? என்று கேட்க ஆர்வமுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் குழந்தை பேசிய முதல் வார்த்தையை டிக்டாக்கில் பதிவு செய்தனர். அதை அவர்கள் திரும்ப கேட்ட போது அதிர்ந்து போனார்கள். அதாவது அந்த குழந்தை முதன் முதலாக, ‘alright bruv’ என்று பேசியிருக்கிறது. அதனைக் கேட்டவுடன் இருவரும் அதிர்ந்தனர். இது தொடர்பில் அவர்களுக்கு தெரிவித்துள்ளதாவது, “எங்களது குழந்தை வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமான வார்த்தையை பேசியது அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
This adorable baby shocked his mum – when he said 'alright bruv' 🤣 pic.twitter.com/ozrgRdAoA1
— Daily Star (@dailystar) December 16, 2021
நாங்கள் பதிவிட்ட டிக்டாக் வீடியோ மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து வைரலாகி இருக்கிறது. குழந்தை பேசியதை நாங்கள் சரியாக கேட்கவில்லை. ஏனென்றால் அதனை பதிவு செய்வதில் ஆர்வமாக இருந்தோம்” என்று தெரிவித்துள்ளனர்.