எம்.ஜி.ஆர் நடித்த “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படம் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் வெளியிடப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் “உலகம் சுற்றும் வாலிபன்”. இப்படத்தில் எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். மேலும் லதா, மஞ்சுளா, சந்திரகலா என மூன்று கதாநாயகிகள் இப்படத்தில் இடம் பெற்றிருந்தனர். கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுதிய இப்படத்தின் பாடலுக்கு விஷ்வநாத் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் வரும் பச்சைக்கிளி முத்துச்சரம், சிரித்து வாழ வேண்டும் உட்பட அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் டால்பி அட்மாஸ் சவுண்ட்டுடன் தற்போது திரையரங்குகளில் மீண்டும் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியிடப்படுகிறது. சரோஜா பிக்சர்ஸ் மற்றும் 7 ஜி பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை வெளியிட உள்ளனர்.