நம்மில் பெரும்பாலானோர் முதுகு வலியால் அவதிப்பட காரணமே நமது வாழ்க்கை முறை தான். நல்ல உணவு முறை, உடற்பயிற்சி, சரியான தோற்ற நிலையில் உணர்வது, வேலை செய்வது உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கங்கள் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இதற்கு பின்வரும் யோசனைகளை தினமும் பின்பற்றினால் முதுகுவலி பறந்துவிடும்.
தினசரி ஸ்ட்ரெச்சிங்:
உடலை வளைத்து நிமிர்த்தி மேற்கொள்ளும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் உடலின் நெகிழ்வுத் திறனை மேம்படுத்தி உங்களை சுறுசுறுப்பாக்கும். காலை மாலை என இருவேளைகளிலும் நீங்கள் ஸ்ட்ரெச்சிங் செய்துவந்தால் உங்களது கை, கால்கள், முதுகு உள்பட உடல் இயக்கத்தை எளிதாக்குவதுடன் முதுகு வலியை போக்கும்.
யோகா பயிற்சி:
அடி முதுகு வலியை விரட்ட மிகச் சிறந்த தீர்வு யோகா. யோகா பயிற்சிகளால் உடலின் நெகிழ்வுத் தன்மையும் வலிமையும் அதிகரிப்பதுடன் மன அழுத்தமும் குறையும். வளைந்து துணியில் முடியாத நிலையில் இருக்கும் முதியோர் மற்றும் நோயுற்றோர் சேர் யோகா செய்யலாம்.
சரியான தோற்ற நிலை:
நாற்காலியில் அமரும் போது ஒரு பக்கம் சாய்ந்து உட்காருவது அல்லது குணிந்து அமர்வது முதுகு தண்டிற்கு அதிக அழுத்தம் கொடுக்கும். இதனால் கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படும். ஆகவே நிற்கும்போது, அமரும் போது சரியான தோற்ற நிலையில் நிமிர்ந்து நிற்பது வழிகளை தடுக்கும்.
சிகரெட் கைவிடவும்:
புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்பது நம் அனைவருக்கும் தெரியும் புகைப் பிடிக்காதவர்களை விட, புகைப்பிடிப்பவர்களுக்கு முதுகுவலி அதிகம் ஏற்படும். சிகரெட் புகையிலை பொருட்களில் நிகோடின் நச்சு ரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதனால் எலும்புகளும் நரம்புகளும் பாதிப்படைகின்றன. இதன் காரணமாக முதுகுத்தண்டு பாதிக்கப்படுகிறது.
சரியான காலணிகளை அணியவும்:
சௌகரியமான, ஹீல்ஸ் உயரம் குறைவான காலணிகள் அணிவதன் மூலம் முதுகு வலியை தடுக்கலாம். நீங்கள் நிற்கும் போது உங்கள் முதுகு தண்டின் மீது அழுத்தம் ஏற்படாமல் காக்கும். முதுகுவலியை தவிர்க்க குறைவான ஹீல்ஸ் கொண்ட காலணிகளை அணிய வேண்டும்.
எடை குறைப்பு:
நீங்கள் உடற்பருமன் மிக்கவராக, குண்டாக இருந்தால் உங்கள் எடையை குறைப்பதன் மூலம் முதுகு வலியை குணப்படுத்தலாம். இதனை சரிசெய்ய, குறைவான உணவை உண்ணுங்கள். அதிகமாக உடற்பயிற்சி செய்யுங்கள்.
ஆரோக்கியமான தூக்கம்:
நீங்கள் தினசரி 7 முதல் 8 மணி நேரம் தூங்குவதால் தசைகளை தளர்த்தி, பழுதுகளை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். சரியான மெத்தை மிதமான முதல் கடினமானது வரை முதுகில் அழுத்தத்தை தாங்குவதால் வலியை குறைக்கும்.
எப்போது மருத்துவரை பார்ப்பது:
- இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் வலி நீடிப்பது
- ஒத்தடம் கொடுத்தல், வலி நிவாரணி உள்ளிட்ட
- ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பின்பும் அதிகமாக வழி இருப்பது
- கை கால்களில் துளைக்கும் வழி தீவிர வலி அல்லது மரத்துப்போன உணர்வு
- இரவு நேரங்களில் தீவிர முதுகு வலி
- மலம் சிறுநீர் கழித்தலில் சிரமம்.
உங்கள் முதுகை வலுப்படுத்த:
1.lying knee hug stretch
2.bottom to heel stretch
3. the bridge stretch