சென்னை எழும்பூர்- திருச்சி சிறப்பு ரயில் வழித்தடங்களிலும் ஜூன் 20 21ல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது பல மாவட்டங்களிலும் தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் ஜூன் 20ம் தேதியிலிருந்து முதல் கட்டமாக 10 சிறப்பு ரயில்களை இரு வழிகளிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி,
ஜூன் 20- ஆம் தேதி அன்று சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் (06865)
ஜூன் 21- ஆம் தேதி அன்று தஞ்சாவூர்- சென்னை எழும்பூர் (06866)
ஜூன் 20- ஆம் தேதி ஆண்டு சென்னை எழும்பூர்- கொல்லம் (06101)
ஜூன் 21- ஆம் தேதி அன்று கொல்லம்- சென்னை எழும்பூர் (06102)
ஜூன் 20- ஆம் தேதி அன்று டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் (02695)
ஜூன் 21- ஆம் தேதி அன்று திருவனந்தபுரம்- டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் (02696)
ஜூன் 20- ஆம் தேதி அன்று டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல்- ஆலப்புழா (02639)
ஜூன் 21- ஆம் தேதி அன்று ஆலப்புழா- டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் (02640)
ஜூன் 20- ஆம் தேதி அன்று டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல்- மேட்டுப்பாளையம் (02671)
ஜூன் 21- ஆம் தேதி அன்று மேட்டுப்பாளையம்- டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் (02672)
ஜூன் 20- ஆம் தேதி அன்று சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் (06851)
ஜூன் 21- ஆம் தேதி அன்று ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் (06852)
ஜூன் 20- ஆம் தேதி அன்று கோவை- நாகர்கோவில் (02668)
ஜூன் 21- ஆம் தேதி அன்று நாகர்கோவில்- கோவை (02667)
ஜூன் 20- ஆம் தேதி அன்று திருவனந்தபுரம்- மதுரை (06343)
ஜூன் 21- ஆம் தேதி அன்று மதுரை- திருவனந்தபுரம் (06344) இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 20- ஆம் தேதி அன்று மதுரை- புனலூர் (06729), ஜூன் 21- ஆம் தேதி அன்று புனலூர்- மதுரை (06730), ஜூன் 21- ஆம் தேதி அன்று சென்னை எழும்பூர்- திருச்சி (02653), ஜூன் 20- ஆம் தேதி அன்று திருச்சி- சென்னை எழும்பூர் (02654) சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.