Categories
மாநில செய்திகள்

மீண்டும் சுற்றுலா தலங்களில் கூடுவதற்கு தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு ..!!

தமிழகத்தில் மீண்டும் சுற்றுலாத்தலங்களில் கூடுவதற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூடுவதை தடுப்பதற்காக தடை விதித்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி சுற்றுலாத்தலங்கள் இலட்சக்கணக்கில் பொதுமக்கள் ஒன்று கூடுவார்கள். இதனால் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை மனதில் கொண்டு புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு காணும் பொங்கல் அன்று மக்கள் கூட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்று நாட்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி வண்டலூர், அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்கள், சென்னை, கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட அனைத்து கடற்கரையிலும் பொதுமக்கள் விடுமுறை தினங்களை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு உத்தரவை மதித்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |