பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, நிதிஷ்குமார் காங்கிரஸ், தேஜஸ்வியுடன் கூட்டணி அமைச்சர் புதிய அரசை அமைக்க இருக்கின்றார். இந்த அரசியல் குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிக்கையாளர், அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது ஒன்னும் பெரிய குற்றம் என்று சொல்ல வேண்டாம். எல்லா கட்சியும் செய்யுற வேலைதான். பிஜேபி செய்யாத சந்தரப்பவாதமா ? மற்ற கட்சிகள் செய்தார்கள். எல்லோருமே செய்றாங்க.
அதை ஒன்னும் பெரிய தவறாக எடுக்க வேண்டாம். ஆனா அதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் ? என்பதுதான் பிரச்சனை. நிதிஷ்குமார் மாறி, மாறி கூட்டணி வைக்கிறார். அப்படியும் அவருக்கு மக்கள் செல்வாக்குறைவதில்லை. அதனால் அந்த சந்தர்ப்பவாதத்தை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் 43இடங்களில் மட்டும் நிதிஷ் கட்சி வெற்றி பெற்றது எதனால் என்றால்,
பிஜேபியால் தூண்டப்பட்ட சிராக் பஸ்வான் தனியாக தேர்தலில் போட்டியிட்டு, நிதிஷ்குமார் கட்சி மேலே தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தினர். பாஜக சிராக் பஸ்வான் மூலம் நிதிஷ் கட்சிக்கு டேமேஜ் பண்ணுனாங்க. ஆனால் நிதிஷ் கூட்டணியை உடைக்க முடியாத காரணத்தால், பாஜகவுக்கு உதவி செய்த சிராக் பஸ்வான்னையே ஒதுக்கி வைத்தார்கள்.
ஊழல்வாதி என்று சொல்லி தான் 2017இல் நிதிஷ் விலகினார். மீண்டும் அவருடனே சேர்வது சந்தர்ப்பவாத அரசியல் தான். ஆனால் மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் ? ஆனால் பிஜேபி இவருக்கு கொடுக்கின்ற பிரச்சனைகளை கவுண்டர் பண்ணுவதற்காக இவர் நிர்பந்தப்படுத்தப்பட்டுள்ளார்.
பிஜேபி நிதிஷ்குமாரின் அனுமதி இல்லாமலால் ஆர்.சி.பி.சிங்கை யூனியன் மினிஸ்டர் ஆக வளர்த்தார்கள். பீகாரருக்கு ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் என்று கொடுப்பேன்னு சொல்லி பிரதமரே 2014இல் எல்லாம் பேசினாரு; ஆனா இன்னும் வரைக்கும் அந்த ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் அந்தஸ்து கொடுக்கல. ஸ்பெஷல் நிதி கேட்டார்; அதுவும் கொடுக்கவில்லை. அந்த மாதிரி நிறைய விஷயங்கள் இருக்கின்றது.
பீகாரில் இப்போது சேர்கின்ற இந்த கூட்டணி 2024 பாராளுமன்ற தேர்தலின் போதும் இருந்தால் நிச்சயமாக பிஜேபிக்கு ஒரு பின்னடைவாக பீகாரில் இருக்கும். ஏனென்றால், பிஜேபிக்கு உ.பி, பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் இதெல்லாம் ரொம்ப ஸ்ட்ராங் ஸ்டேட். அதுல ஒரு ஸ்டேட் போதுனா அவங்களுக்கு ஒரு பின்னடைவு தான். மேலும் மற்ற அரசியல் கணக்கீடு எப்படி ஆகுதுன்னு பாக்கணும். அதையெல்லாம் சேர்த்து பார்த்தால் தேசிய அளவில் பாஜக அரசியலுக்கு பாதிப்பு ஏற்படலாம்.