ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகாமல் வக்கீல் மூலமாக வாக்குமூலம் கொடுத்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா,
ஆறுமுகசாமி ஆணையத்திலிருந்து சிறைச்சாலைக்கு பெங்களூருக்கு வந்த கடிதம் என்னன்னா…. மூணு ஆப்ஷன் கொடுத்திருந்தாங்க.. ஒன்னு நேரில் வரவும். இரண்டாவது வக்கீல் வழியாக தெரிவிக்கலாம். மூன்றாவது நான் எழுத்து வடிவிலும் கொடுக்கலாம். கொஸ்டின் அங்க இருந்து வரும். அதற்கான பதிலை நான் எழுத்து வடிவில் கொடுக்கணும். நான் அதைத் தேர்ந்தெடுத்தேன். அதை தேர்ந்தெடுத்து அவங்க கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலை கொடுத்தேன்.
மத்தவங்க எப்படி நினைக்கிறாங்களோ தெரியல. என்னை பொறுத்த வரைக்கும் அது ( ஜெ மரணம் விவகாரம் ) கிளியராகணும். அந்த ரிசல்ட் வெளியே தெரியணும். ஏன்னா அரசியல் காரணங்களுக்காக நான் இருந்து பைட் பண்றதுங்கறது வேற. நான் இல்லாத போது முதுகுக்கு பின்னால குத்துறது மனிதனே கிடையாது. புரியுதா ? அதாவது ஒருத்தங்களை எதிர்க்கணும் அப்படின்னா நேரில் எடுக்கணும்.
நான் எல்லாம் பெண்ணா இருந்தாலும், நாங்க எல்லாம் பெண் சிங்கமாக இருந்தோம். கருணாநிதி பண்ணாத தொந்தரவா ? எங்களுக்கு… அந்த தொந்தரவை எல்லாம் நாங்க தாங்கி ரெண்டு பெண்மணிகளும் சாதித்து காட்டினோம். எதிர்த்து நின்று தான் நாங்க போராடினோம். எங்களுக்கு ஆட்சியை கொடுங்கன்னு நாங்க மக்களிடம் போய் கேட்டோம். அதனால நாங்க சண்டையிடுவதற்கு பயந்து, முதுகுக்கு பின்னால் இருந்துகிட்டு பேசுறவங்க கிடையாது. நாங்க ரெண்டு பேரும் அப்படிதான் இருந்தோம். அதனாலதான் தமிழக மக்களுக்கு நிறைய காரியங்களை எங்களால் செய்ய முடிஞ்சது. இப்பயும் என்னோட நினைவு அதுதான் என தெரிவித்தார்.