ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஆறுமுகசாமி ஆணையத்தின் கேள்வி எல்லாத்துக்கும் சரியான பதிலை கொடுத்தேன். மத்தவங்க எப்படி நினைக்கிறாங்களோ தெரியல. என்னை பொறுத்த வரைக்கும் அது ( ஜெ மரணம் விவகாரம் ) கிளியராகணும். அந்த ரிசல்ட் வெளியே தெரியணும். ஏன்னா அரசியல் காரணங்களுக்காக நான் இருந்து பைட் பண்றதுங்கறது வேற. நான் இல்லாத போது முதுகுக்கு பின்னால குத்துறது மனிதனே கிடையாது. புரியுதா ? அதாவது ஒருத்தங்களை எதிர்க்கணும் அப்படின்னா நேரில் எதிர்க்கணும்.
நான் எல்லாம் பெண்ணா இருந்தாலும், நாங்க எல்லாம் பெண் சிங்கமாக இருந்தோம். கருணாநிதி பண்ணாத தொந்தரவா ? எங்களுக்கு… அந்த தொந்தரவை எல்லாம் நாங்க தாங்கி ரெண்டு பெண்மணிகளும் சாதித்து காட்டினோம். எதிர்த்து நின்று தான் நாங்க போராடினோம். எங்களுக்கு ஆட்சியை கொடுங்கன்னு நாங்க மக்களிடம் போய் கேட்டோம். அதனால நாங்க சண்டையிடுவதற்கு பயந்து, முதுகுக்கு பின்னால் இருந்துகிட்டு பேசுறவங்க கிடையாது. நாங்க ரெண்டு பேரும் அப்படிதான் இருந்தோம். அதனாலதான் தமிழக மக்களுக்கு நிறைய காரியங்களை எங்களால் செய்ய முடிஞ்சது. இப்பயும் என்னோட நினைவு அதுதான் என் தெரிவித்தார்.