Categories
சினிமா

“பிரபல ஹிந்தி நடிகருக்கு கெட்ட பழக்கம்” நடிகைகளை பற்றி கடவுளுக்கு தான் வெளிச்சம்…. பாபா ராம்தேவின் பரபரப்பு பேச்சு….!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மொராதாபாத் நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆரியவீர் மற்றும் வீராங்கனா மாநாடு என்ற பெயரில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, நடிகர் சல்மான் கான் போதை பொருட்களை பயன்படுத்தியுள்ளார். நடிகர் ஷாருக்கானின் மகனும் போதை பொருளை பயன்படுத்தி சிறைக்கு சென்று வந்துள்ளார். நடிகர் அமீர்கான் பற்றி எனக்கு தெரியாது.

நடிகைகளை பற்றி கூறவேண்டும் என்றால், அவர்களைப் பற்றிய அனைத்து உண்மைகளும் கடவுளுக்கு மட்டும்தான் வெளிச்சம் என்றார். திரைத்துறை முழுவதுமாக போதைப்பொருள் விளையாடுகிறது. இதேபோன்று அரசியலிலும் கூட போதை பொருள் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது மதுபான பாட்டில்களை விநியோகம் செய்கிறார்கள். போதைப்பொருள் விநியோகத்தில் இருந்து இந்தியா முழுமையாக விடுபட வேண்டும்.

எனவே  நாம் அனைவரும் தீர்மானம் எடுத்துவிட்டு அதற்காக ஒரு இயக்கத்தை தொடங்குவோம் என்று கூறினார். இந்த கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பிரபல நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு அதிகரித்த நிலையில் பல முன்னணி நடிகைகள் போதை பொருள் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

Categories

Tech |