தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்த பூங்குழலி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பில் தற்போது கட்டாகுஸ்தி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தான் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அவர் கூறியதாவது, சிறுவயதில் குருவாயூர் சென்ற போது என்னை ஒருவர் மோசமான முறையில் தொட்டார். நான் சிறுபிள்ளையாக இருந்ததால் அப்போது என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை. அதன்பிறகு கோயம்புத்தூரில் நடந்த ஒரு பிரமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போதும் ஒருவர் என்னை தவறான முறையில் தொட்டார்.
உடனே நான் எதிர்வினை ஆற்றி விட்டேன். என்னை யார் தவறான முறையில் தொட்டாலும் கண்டிப்பாக அதற்கு அந்த இடத்தில் பதிலடி கிடைக்கும். இந்த பேட் டச் சம்பவங்கள் நிறைய பேர் வாழ்க்கையில் நடந்திருக்கலாம். மேலும் இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து மாற்றம் வருமா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.