Categories
அரசியல் மாநில செய்திகள்

படார் படார்னும்…. மடார் மடார்னும் சத்தம் வரும்… அது தான் பழனிசாமி ஆச்சி …!!

கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே எடப்பாடி பழனிசாமி அரசில் உள்ள குறைகளை கண்டுபிடிக்க முடியும் என முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விக்கிரவாண்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் நேற்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, கடந்த நான்கு ஆண்டுகளாக பழனிச்சாமி எதையும் செய்யல என்கிறதுக்காக தான் தமிழ்நாட்டு மக்கள் தங்களுடைய மனுக்கள் மூலமா சொல்லி வராங்க. இந்த லட்சணத்துல பூத கண்ணாடி வச்சி பார்த்தாலும் தனது ஆட்சியில் எந்த குறையும் ஸ்டாலினால் கண்டுபிடிக்க முடியாது அப்படின்னு பழனிச்சாமி சொல்லியிருக்கிறாரு.

பழனிச்சாமி ஆட்சி குறைகளை கண்டுபிடிக்க பூத கண்ணாடி தேவையில்லை. கண்ண மூடிகிட்டு இருந்தாலே தெரிஞ்சுரும். கண்ண மூடிகிட்டு இருந்தாலே கண்டுபிடிச்சிடலாம். திடீர்ன்னு விழுப்புரத்துல தடுப்பணை உடைய சத்தம் வரும். படாருனு தாராபுரம் பாலத்துல விரிசல் விடுகிற சத்தம் வரும். கரூர்ல மினி கிளினிக் உடைஞ்சது பாருங்க அந்த சத்தம் வரும். நாமக்கல்ல மருத்துவ கல்லூரி கட்டணமே இடிஞ்சு விழுந்துருச்சு அந்த சத்தம் வரும்.

Image result for etappadi

படார் படார்னும்…. மடார் மடார்னும் அரசு கட்டிடங்கள் உடைஞ்சு விழுந்தா அது பழனிச்சாமி ஆட்சின்னு அர்த்தம். இதெல்லாம் பொதுப்பணித்துறை மந்திரியான பழனிசாமியோட கைங்கரியம் என்று அர்த்தம். இது எல்லாத்தையும் காதால் கேட்கலாம், கண்ணை திறந்து பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. பழனிச்சாமியுடைய ஊழல் ஆட்சிக்கு உதாரணம் சொல்லனும்னா…

விழுப்புரத்துல பெண்ணை ஆற்றில் தடுப்பனை உடஞ்சி விழுந்த காட்சி ஒன்று போதாதா ? அது ஒன்று போதாதா சம்பிளுக்கு. இருபத்தி ஐந்து கோடி ரூபாய் மதிப்பிட கட்டப்பட்ட தடுப்பனை, ஒரு மாத காலத்துல உடைஞ்சு விழுந்துருச்சி அது அணை இல்ல சுவர் தான் என்று சட்டத்துறை அமைச்சர் சண்முகம் சொல்றாரு.காலையில பார்த்தா அணைனு சொல்லுவாரு, ராத்திரில பார்த்தா சுவர்னு சொல்லுவாரு. அப்படி ஒரு மனிதன் தான் சண்முகம்.

Image result for cvsanmugam

25கோடி ரூபாய் மதிப்புள்ள அணையில எத்தனை கோடி இவங்களால சுருட்டப்பட்டதுனு தெரியல. அணை உடைச்சதும் திருடனுக்கு தேள் கொட்ட மாதிரி மாட்டிக்கொண்டார் சண்முகம். நாங்கள் இன்னமும் அணைய திறக்கலை என்னும் சொல்லி இருக்கிறார். நாங்க இன்னமும் அணைய திறக்கணும்னு சொல்லி இருக்காரு. 20.12.2020 அன்றைக்கு திறந்து வச்சாங்க. இந்த புழுகு ஆகாசப் புழுகு பாத்துருக்கீங்களா…. அதான் இது.

நல்ல வேலை நாங்க  இன்னும் அன்னையே கட்டலைன்னு . சண்முகம் சொல்லல. ஒரு படத்துல வைகை புயல் வடிவேல் சொல்லுவார், கிணத்த காணோம், கிண்ணத்தை காணோம் அது மாதிரி பேசிட்டு இருக்காரு சண்முகம். ஊழல் முறைகேடு காரணமா அந்த அணை இடிஞ்சி விழுந்துச்சு.  அந்த ஒப்பந்தக்காரர் மேல இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துச்சு ? சில அதிகாரிகளை சஸ்பெண்ட் செஞ்சிருக்காங்க. இது வெறும் கண்துடைப்பு என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |