Categories
அரசியல்

குழந்தைகளுக்கு பிடித்த “பாதுஷா”…. தீபாவளிக்கு செஞ்சு அசத்துங்க….!!!!

பாதுஷா செய்ய தேவையான பொருட்கள்:
மைதா – 1 1/2 கப்
வெண்ணெய் – 1/2 கப்
சர்க்கரை – 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
தயிர் – 2 டேபிள்டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
பாகு செய்ய:
தண்ணீர் – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
குங்குமப்பூ – 1 சிட்டிகை
பாதுஷா செய்முறை:
மைதா மாவில் பேக்கிங் சோடாவை கலந்து 2 முறை நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு பாத்திரத்தில் உருக்கிய வெண்ணெய், தயிர், சர்க்கரை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவை சேர்த்து கொள்ள வேண்டும். இதனையடுத்து இந்த மாவை மிருதுவாகவும், கெட்டியாகவும் பிசைய வேண்டும். தேவைப்பட்டால் மட்டும் சிறுது நீர் தெளித்துக் பிசைய வேண்டும். இந்த கலவையை குறைந்தது 15 நிமிடமாவது பிசைய வேண்டும்.
பின் நடுத்தர உருண்டையாக எடுத்து ஓரத்தில் மடித்து விடவும் அல்லது வடைபோல் தட்டி நடிவில் சற்று விரலால் ஓட்டை போட்டு கொள்ள வேண்டும். இதனைதொடர்ந்து கடாயில் எண்ணெயை ஊற்றி காயவைத்து அதனை அடுப்பிலிருந்து இறக்கி பாதுஷாக்களைப் போட வேண்டும். பாதுஷா மேலே எழும்பி வரும்போது மீண்டும் எண்ணெய் பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறுதீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்க வேண்டும். அதன்பின் பொரித்த பாதுஷாக்களை சூடான பாகில் 5 முதல் 10 நிமிடங்கள் போட்டு எடுக்க வேண்டும். இப்போது சுவையான பாதுஷா தயார்.

Categories

Tech |