Categories
தேசிய செய்திகள்

“பேக்கேஜ் கண்டெய்னர்” காற்றில் உருண்டு வந்து விமானம் மீது மோதியது..!!

‘பேக்கேஜ் கண்டெய்னர்’ விஸ்டாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் மோதியதில் ஒரு பக்க எஞ்சின் சேதமடைந்தது. 

மும்பை விமான நிலையத்தில் விஸ்டாரா ஏர்லைனுக்கு சொந்தமான விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது கடுமையான காற்று வீசியதன் காரணமாக அருகில் உள்ள வேறு ஏர்லைனுக்கு  சொந்தமான ‘பேக்கேஜ் கண்டெய்னர்’ உருண்டு வந்து விஸ்டாரா ஏர்லைன்ஸ் விமானத்தின் மீது வேகமாக மோதியது. இதில் விமானத்தின் ஒரு பக்க எஞ்சின் பலத்த சேதம் அடைந்ததாக விமானத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Image result for Vistara Airlines owned a flight at Mumbai airport.

இது குறித்து தகவல் தெரிவித்த விஸ்டாரா ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர், “நேற்று நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது ‘பேக்கேஜ் கண்டெய்னர்’ உருண்டு வந்து வேகமாக மோதியது. நல்ல வேளையாக விமானத்தில் பயணிகள் யாரும் இல்லை. விமானத்தின்  ஒரு பகுதி எஞ்சின் பலத்த சேதமடைந்துள்ளது.அதனை சரி செய்வதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆகும்.அது வரையில் விமானம் அங்கேயே நிறுத்தப்பட்டிருக்கும். இதனால் விமான போக்குவரத்து அட்டவணையில் சில மாற்றங்கள் ஏற்படலாம்” என தெரிவித்தார்.

Categories

Tech |