Categories
உலக செய்திகள்

பகீர்!…. நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயரில் போலி பாஸ்போர்ட்”… 3 பேர் கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

நொய்டா நாட்டில் சமீபகாலமாகவே சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஓய்வு பெற்ற கர்னல் ஒருவருக்கு மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகையை தருவதாக கூறி 1.80 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏக் உபர்முக்வே, எட்வின் காலின்ஸ் மற்றும் ஒகோலோய் டாமியன் ஆகிய 3 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானதோடு, மேட்ரிமோனியல் இணையதளங்கள் மற்றும் டேட்டிங் ஆப் மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. அதோடு அபோட் பார்மா சூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் மோசடி குற்றங்களில் ஈடுபட்டதும் தெரியவந்ததோடு, அவர்களிடமிருந்து நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயரில் இருந்த போலி பாஸ்போர்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |