Categories
தேசிய செய்திகள்

பகீர்! “பிரிட்ஜுக்குள் வைத்து, குக்கரில் சமைத்து” கேரள நரபலி சம்பவத்தில் திகிலூட்டும் அதிர்ச்சி….!!!!

கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் ரோஸ்லின் மற்றும் பத்மா ஆகிய 2 பெண்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் லாட்டரி தொழில் விற்பனை செய்து பிழைப்பு நடத்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2 பேரையும் காணவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 2 பேரின் செல்போன் சிக்னலும் திருவல்லா பகுதியில் காட்டியது. அதோடு காணாமல் போன 2 பெண்களுடன் போலி மந்திரவாதியான முகமது ஷபி என்பவரிடம் கடைசியாக பேசியதும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருவல்லா பகுதியில் வசித்து வரும் ஆயுர்வேத மருத்துவரான பகவல் சிங் என்பவருக்கு அதிக கடன் பிரச்சினைகள் இருந்துள்ளது.

இந்த கடன் பிரச்சனையில் இருந்து எப்படி வெளியே வரவேண்டும் என்பது குறித்து போலி மந்திரவாதியான முகமது ஷபியிடம் மருத்துவர் பேசியுள்ளார். அதற்கு முகமது ஷபி 2 பெண்களை நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து நரபலி கொடுப்பதற்கான பெண்களை தான் அழைத்து வருவதாக கூறிய முகமது ஷபி அதற்கான பணத்தை மட்டும் மருத்துவரிடம் இருந்து பெற்றுள்ளார். அதன் பிறகு தனக்கு தெரிந்த பத்மா மற்றும் ரோஸ்லின் ஆகிய 2 பேரையும் பூஜைக்கு முகமது ஷபி அழைத்து வந்துள்ளார். அவர்களிடம் இரவு நேர பூஜையில் கலந்து கொண்டால் பணம் தருவோம் என்று முகமது ஷபி கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்து 2 பெண்களும் பூஜையில் கலந்து கொள்ள வந்துள்ளனர்.

அங்கு பூஜையில் வைத்து 2 பெண்களின் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்தது விசாரணையில் தெரிய வந்ததால், முகமது ஷபி, மருத்துவர் பகவல் சிங் மற்றும் அவருடைய மனைவி லைலா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி பகவல் சிங் மற்றும் லைலா ஆகியோர் சமைத்து சாப்பிட்டுள்ளனர். மேலும் போலி சாமியாரின் அறிவுறுத்தலின் பேரில், செல்வம் பெருகும் என்பதற்காக நரபலி கொடுத்த பெண்களின் உடலை சாப்பிட்டதாக லைலா அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் குற்றவாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில், எப்படி நரம்புலி கொடுத்தார்கள் என்பதை பொம்மை வைத்து நடித்துக் காட்டியுள்ளனர். அப்போது 2 பெண்களையும் துண்டு துண்டாக வெட்டி 10 கிலோ சதைகளை பிரிட்ஜுக்குள் வைத்துள்ளனர். அந்த சதைகளை பகவத்சிங் மற்றும் முகமது ஷபி ஆகியோர் சமைத்து சாப்பிட்டுள்ளனர். பெண்களின் மாமிசத்தை குக்கரில் வைத்து சமைத்து சாப்பிட்டதுள்ளதாக புதிய வாக்குமூலத்தையும் கொடுத்துள்ள்னர். மேலும் குற்றவாளிகள் பொம்மை வைத்து நடித்துக் காட்டிய வீடியோவானது தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |