Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘பாகுபலி’ படத்தில் நடித்த குழந்தையா இது ?… ரசிகர்கள் ஆச்சரியம்…!!!

‘பாகுபலி’ படத்தில் மகேந்திர பாகுபலியாக நடித்திருந்த குழந்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது .

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ் , ராணா நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘பாகுபலி’ . இந்த பிரம்மாண்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் ஆரம்ப காட்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஒரு குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு மகிழ்மதி தேசத்தின் அடுத்த அரசன் இவர்தான் என்று முழங்குவார் . இதன்பின் அந்த குழந்தையை காப்பாற்ற ஆற்றில் இறங்கி வருவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருக்கும் .

 

இந்நிலையில் மகேந்திர பாகுபலியாக நடித்த அந்த குழந்தை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது . அது தன்வி என்ற பெண் குழந்தை என்றும் தற்போது அவர் யுகேஜி படித்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு வெளியாகியுள்ளது . பாகுபலி படத்தில் கைக் குழந்தையாக நடித்த தன்வி தற்போது நன்றாக வளர்ந்து சிறுமியாக இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |