Categories
தேசிய செய்திகள்

ஹிஜாப்புடன் வந்த பெண்ணுக்கு அனுமதி மறுப்பு…. ரெஸ்டாரெண்டுக்கு சீல்…. அரசு அதிரடி முடிவு….!!!

கர்நாடக மாநிலம்  உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த ஆறு இஸ்லாமிய மாணவிகளை வகுப்பறையில் அனுமதிபதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆறு இஸ்லாமிய மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அங்கு எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து மாணவிகள்  உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தனர். இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் நாடுமுழுவதும் ஹிஜாப் விவகாரம் குறித்து பேசப்பட்டது.

இந்த நிலையில் பக்ரைனில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு  ஹிஜாப்  அணிந்து வந்ததற்காக அங்கு பணிபுரியும் இந்திய நாட்டைச் சேர்ந்த மேலாளர் ஒருவர் அந்தப் பெண்ணை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார். இதனால் பக்கரைன் அரசு அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்துள்ளது. இஸ்லாமிய நாடான பக்ரைனில் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு மறுப்பு தெரிவித்த இந்தியரின் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Categories

Tech |